பக்கம்:களத்துமேடு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்க் கொத்து 12

மாம்பழம் ஒன்று!... அணில்கள் இரண்டு!

பெருங்காயம் வைத்த டப்பாவாக அந்தக் களத்துமேடு, அதற்குகந்த மணத்தை உள்ளடக்கித் திகழ்ந்து கொண்டிருந்தது!

மார்கழி கடைசியிலும் தை முடியவும் அந்தக் களத்து மேட்டில் புண்ணியம் விளைந்து கொண்டிருக்கும். உழைப்பு சம்பாதித்துக் கொடுத்த புண்ணியம் அது. மேல் வாரத்துக்கு உழுபவர்கள், குடிக்காண்யாட்சி, பாத்தியதை கொண்டு உழைப்பவர்கள், சொந்த வெள்ளாமை வைத்துக் கொண்டவர்கள். அன்றாடக் கூலிகள், நெல் தூற்றும் பள்ளர்கள் என்று இப்படியொரு புனிதம் மண்டிய புதிய உலகமே அங்கு உருப்பெற்றுத் திகழும். நெற்களஞ்சியமாகப் பொலியும். அந்தக் களத்துமேடு இப்போது பாரம்பரியப் பெருமை பூண்டு விளங்கியது. குலத்தோடு ஒட்டி விட்ட குணநலம் அதன் சுற்றுச்சார்பில் ஆரோகணித்து விட்டி, ருந்ததில் வியப்பேது?

சுற்றுவட்டமாகக் கொண்டிருந்த புளியமரங்களுக்கு நடுவில் இருந்த பொட்டல் வெளியில் - கட்டாந்தரையில் - பனி மூட்டத்தின் முத்திரையும், மூட்டம் களைந்த பின் படர்ந்து கிடந்த கதிரொளிப்பாய்ச்சலின். கோலமும் காணப்பட்டன. ஊர்க்கூட்டம், ஊர்ப்பஞ்சாயம் போன்ற பொதுக் காரியங்களுக்கும் கைகொடுத்த இடம் ஆயிற்றே அது!

நிழல் கவிழ்ந்திருந்த களத்து மேட்டில் ராஜகம்பீரத்துடனும் தன்னம்பிக்கைத் தெளிவுடனும் வந்து நின்றான் சிங்காரம், சுருட்டை முடிகள் நெற்றியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்பியிருந்த விபூதி அவனுடைய முகத்துக்கு ஒரு களையையும், பத்தாம்நாள் நிலக்கடலைப்

க. மே. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/120&oldid=1386404" இலிருந்து மீள்விக்கப்பட்டது