பக்கம்:களத்துமேடு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

களத்து மேடு


என்னொடத்த வயசுப் பொண்ணு நீ!... வேளை இப்பதான் வந்திருக்கு!...." என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் அங்கம்மா.

பக்கத்து ஒழுங்கைப் பையன் வீரமணி வந்து விளக்குக் கொளுத்திக் கொண்டு சென்றான்.

ஈரத்தரையைப் பற்றிய கவலை - இற்று, "அக்கா!" என்று கூப்பிட்டவாறு பூங்காவனம் வந்தாள். அவள் கழுத்தில் நாலுவடச் சங்கிலி அழகாக விளங்கிற்று.

தைலி எட்டிப் பார்த்தாள். "தங்கச்சியா? வா!" என்று உபசரித்தாள்.

"அக்கா, இப்ப எம்பாடு திண்டாட்டமாப் பூடுச்சே!... நானு இனிமே என்னா செய்யப் போறேன்?... சிலட்டூர்க் காரரும் நம்பு அயித்தை மவனும் ஆக ரெண்டுபேரும் என்னைக் கட்டிக்கிடப் போறதில்லையாம்!- சொல்லிப் பூட்டாகளாம்! தைலி என்ன பூலோக ரம்பையா என்ன, அதையே பத்தி நெனைச்சு ஆலாப் பறக்குறீங்களேன்னு அவங்க ரெண்டுபேரையும் ஏசிப்புட்டு எங்க அப்பன் வந்திட்டாராம்!..." என்று கலக்கம் காட்டினாள் பூங்கா வனம்.

"அவங்க அவங்க மனசு கொண்டது மாளிகை! இதிலே; மூணாம் பேருக்கு எதிர்ப்பேச்சுக்கு இடமே கெடையாது, தங்கச்சி!... ஒனக்குன்னு ஒருத்தனை ஆண்டவன் இந்த ஊர் நாட்டிலே படைக்காம இருந்திருக்க மாட்டான்!....." என்றாள் தைலி.

"ஆமா, ஒம்முடிவு எப்ப தெரியப் போவுது!" என்று ஆவல்பறக்க விசாரித்தாள் பூங்காவனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/181&oldid=1386240" இலிருந்து மீள்விக்கப்பட்டது