பக்கம்:களத்துமேடு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

களத்து மேடு


சேர்வை கதிகலங்கினார். சிலட்டூர்ப் பிள்ளையை முகம் கொடுத்துக்கூட பார்க்காமல் "உங்களையில்ல, எனக்கு ஒரு அவசரம். நான் ஒரு கல்லு தொலைக்கு ஓடியிட்டுத் திரும்பணும்.... நீங்க நம்ம வூட்டை நாடிப் போயி இருங்க!... சும்மா வெக்கப்படாமப் போங்க....எப்பவும் அது இனி ஒங்க வூடுதான்!..." என்று வார்த்தைகளை அவிழ்ந்து உதறி வீசிவிட்டு விரைந்தார். முதுமை சிரித்ததோ?

சரவணன் சில கணங்கள் அப்படியே நின்றது நின்றபடி நின்றான். பேய்க் கணங்கள் சூழ்ந்து கொண்டதைப் பிரதிபலிப்பவனாக அந்தச் சில கணங்கள் கழிந்தன. பிறகு சுய உணர்வின் விழிப்பினைத் தொட்டுகின்ற வேளையில், தன்னைத் தொடாமல் - தன் உள்ளத்தைத் தொட்ட உணர்வு விழிப்பதுமையின் இனிய நினைவுகள் தந்த கனவு மயக்கம் அவனை ஆட்டிப் படைத்தது. பதைபதைக்கும் வெயில் அப்போது அவனை என்ன செய்துவிட முடியும்?

உணர்வுகளை மனித மனம் கட்டி ஆளுகின்ற நிலையில் தான். மனிதனுக் குரிய மனத்தின் உண்மையான சுயரூப பிம்பம் மகிமை பெறுகிறது.

இது நியதி.

ஆனால் நியதிகள் சட்டங்களாகி விடுவதில்லை; அப்படி ஆகிவிடுவதும் முடியாது.

சரவணன் எவ்வளவோ சிரமப்பட்டுத் தன்னையும் தன் உணர்வுகளையும் ஆண்டு மடக்கினான். மடங்கிய பாதையில், அமைதி கனிந்த மனத்துடன் திரும்பி நடந்தான்.

அப்போது, செங்காளியப்பன் சேர்வை வேர்க்க விறுவிறுக்கத் திரும்பவும் ஓடிவந்து, "வந்துங்க, எந்த ஒரு சேதியையும் எங்காதுக்கு முதல் எடுப்பாச் சொல்லாமல், வேறு யாருகிட்டவும் - ஏன் - எம்மககிட்டக் கூட. நீங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/39&oldid=1386356" இலிருந்து மீள்விக்கப்பட்டது