பக்கம்:களத்துமேடு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

களத்து மேடு

பிள்ளை என்றால், அல்ப சொல்பமாக இருக்க முடியுமா? பனை ஓலைக் குடிசை பதமாக இருந்தது.

“வாங்க...குந்துங்க!”

சாயாக் கடைச் சொந்தக்காரர் முகமன் மொழிந்தார்.

“தண்ணி கம்மியா ஒரு தேத் தண்ணி போடுங்க! ......” என்றான் சரவணன். அங்கே ஒருவரை விளித்து ‘ஒங்க உருளாசிலே மணி என்னாங்க?’ என்று வினவினான். “மணி பன்னிரண்டுங்க!.பதினைஞ்சு நாழிப் பொழுது !... தம்பிக்கு லங்கைப் பழக்கம் ஊர்ப்பட்டது உண்டு போலே! ... அதான் உருளாசின்னு சொன்னிக போல!....’ என்று சொல்லிச் சமாதானப்பட்டவராக, உளுந்துவடையைப் பிட்டுப் போட்டார்.

சாயா போட்டு நீட்டினான் எடுபிடிப் பையன்

அப்போது, “அண்ணாச்சி!” என்று எருச்சிக்காரன் ஒருவன் கூவினான்; அந்தச் சொந்தம் அவனுக்கு ஏழு காசை மிச்சப்படுத்தியது.

சரவணன் தேத்தண்ணீரைப் பருகி முடித்து, காசை மடியிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டுப் புறப்படப் போன சமயத்தில், யாரோ ஒருவன் சீனாக்காரனைப் பற்றிப் பேச்செடுத்தான். அவன் கையில் செய்தித்தாள் ஏதோ இருந்தது. அண்ணாச்சிக்கு அடுத்த ஊருப்போல!... ஏங்க, பாளத்த அந்தப் பட்டாசுக்காரப் பயமவன் சீனாக்காரன் நம்மளைக்கெலிச்சுப்புட முடியுமுங்களா? என்று கேட்டான் அக்குடியானவன்.

அவ்வளவுதான்.

சரவணனுக்குக் கண்கள் சிவந்தன. சிகப்பு லேஞ்சை ஓர் உதறு உதறி விட்டுப் போட்டுக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/41&oldid=1386339" இலிருந்து மீள்விக்கப்பட்டது