பக்கம்:களத்துமேடு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

39


அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் தைலம்மை. "என்னாடி, பொன்னி! உம் மூஞ்சி சுணக்கமாயிருக்குது!" என்று பரிவுகுழப்பக் கேட்டாள்.

"மச்சானுக்கு மேலுக்கு முடியலே. ரெண்டு துண்டு கடலை அரிசியை ஆஞ்சு ஆலங்குடிச் சந்தைக்கு வண்டி போட்டுக்கிட்டு கொண்டு போயித் திரும்பிச்சு மச்சான்' கொஞ்ச முந்தி வந்ததிலேருந்து அவுகளுக்குக் கண்னு மண்ணு புரியாத காச்சல், எம்மவளுக்குப் பால் குடுக்கக்கூட எனக்கு ஒடலே!..."-அவளுடைய எடுப்பான நயனங்கள் அழுதின. மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

தைலம்மைக்குக் கண்ணீரைக் கண்டால், அந்தக் கண்ணீரிலேயே கரைந்துபோய்விடுவாள். கதை தெரியாப் பரிசலோட்டியாகத் தவிப்பாள். "கண்ணைத் துடைச்சுக்கடி உம்மச்சானுக்கு ஆபுசு கட்டியமாய் எழுதிப் போட்டிருக்கும் இல்லாங்காட்டி, ஒன் னை ஆசைகாட்டி வசியப்படுத்தி தன் இச்சையைப் பூர்த்தி செஞ்சுகிட்ட சூட்டோடவே நம்ம ஊர்ப் பஞ்சாயத்துக்குத் தலைநீட்டி, தலை வணங்கிப் படிஞ்சிருப்பாரா?...ஆனதலாலே, தன்னை இதயமுள்ளவராய் ரூபிச்சுக்கிட்டு, ஊருப்பேச்சுப் பிரகாரம் ஒன்னையும் ஒப்பி ஏத்துக்கிட்ட அந்த நல்ல ஆம்புளைக்கு ஆத்தா நல்லவள் நல்லதையேதான் செய்வா; என்னை நம்பு!...ஒம்புட்டு மஞ்சளும் மருக்கொழுந்தும் எப்பவும் நிலைக்கும்! கண்ணைத் துடைச்சுக்கடி, பைத்தியம்!” என்று தேறுதல் சொன்னாள்.

வந்த வேலையை அமைதி பூத்த மனத்துடன் கவனிக்கலானாள் பொன்னாயி, கொசுவத்தை இழுத்துவிட்டுக் கொண்டு.

தைலம்மை வாசற்புறம் வந்தாள்.

அவளுக்குத் 'திக்' கென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/46&oldid=1386355" இலிருந்து மீள்விக்கப்பட்டது