பக்கம்:களத்துமேடு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

41


குதிரைக்குக் கொள் தேவையென்றால் கனைக்குமாம்.

அவனுக்குக் கொள் எதற்கு?--ஏன், பருக்கைகூட வேண்டியிருக்கவில்லை கஞ்சிப்பொழுது தாண்டிவிட வேளை கணித்துக்கொண்டிருந்தது.

"வந்து..."

"அப்பாரு வரலைங்களாங்காட்டி?"

"அவுக வாரத்துக்கு உண்டன பொளுது ஆகிடும்!...”

"அப்பிடி என்ன அவசரம், தெரியலையே?..."

‘‘...............”

"வந்த விருந்தாடியை நடுவாந்தரத்திலே வுட்டுப்புட்டு அப்பிடி என்னா தலைபோற காரியமோ, ஒண்ணும் விளங்கலீங்களே?..."

நிலைப்படிக்கு அண்டி நகர்ந்தாள்.

அவளது தெளிவான வதனத்தில் கிலேசம் படர்ந்தது. அப்போது, கை வேலையை நிறைவேற்றிக்கொண்டு வீடு திரும்பி வந்த பொன்னாயி நிலைப்படியில் கைந்நொடிப் பொழுது நின்று, அவளைப் பார்த்து கண் ஜாடையால் அழகு காட்டி கேலி செய்து விட்டுப் புறப்பட்டாள். அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் திகைந்த தேதி ஊர்ப் பகுதியில் பரவி விட்டிருந்தது. "ஆத்தாடி...நம்ம தைலி இருக்காளே தைவி அவ பார்க்கிறதுக்கு பசுவாத்தான் இருப்பாள்; பாஞ்சாலோ புலி தான்!...அவளைப் படிச்சுக்கிடுறதே ஒரு விடுகதைக்கு நேரேதான்னு நம்ம கூட்டத்திலே மரகதம் சொல்லுவாளே, அவ வாய்க்குச் சர்க்கரைதான் கொட்டணும்!...” என்று சமயத்தை நழுவ விடாமல் நினைத்ததை, நினைத்த கணத்திலேயே கொட்டிவிட்டு, அவசரமாக நகர்ந்தாள். வாசலைத் தாண்டித்தான் அவள் தலை உயர்ந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/48&oldid=1386371" இலிருந்து மீள்விக்கப்பட்டது