பக்கம்:களத்துமேடு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

களத்து மேடு


“நான் செஞ்சது தப்புதான்!”

“நீங்க என்ன தப்பு செஞ்சீங்களாம்?”

“அடி நாளையிலே நீயும் நானும் புருசன் பொண்டாட்டி விளையாட்டு விளையாடினப்ப, நீ முருதாவாப் பேச, நான் மூக்குக்கு மேலே ஆத்திரப்பட்டு உன்னை ஓட்டுச் சில்லாலே கன்னத்திலே வீசி அடிச்சேனே, அது தப்புதான்!”

அவள் கண்களை மூடியபடி சிந்தனையின் உடும்புப் பிடிக்குத் தண்டனிட்டுக் கிடந்தாள். மீண்டும் அந்தப் பேசும் விழிகளை அவள் பேசாமல் திறந்தாள். கண்ணீர்த் துளிகள் சோகத்தின் மெளனம் போல சந்தடியின்றி உதிரலாயின. எதிர்த்தரப்புச் சிறுவனும் சிறுமியும் அவளுக்குத் துண்டுதல் ஆயினரோ ?...

“நீங்க எங்க மீனாச்சி அயித்தை மவன்...சிங்காரம் தானே ?” என்று ஓங்கிய குரலெடுத்து ஒய்யாரப்பார்வை தொடுத்து ஒயிலான பாவனை விடுத்துக் கேட்டாள்.

சிங்காரமோ அவளது பாசத்தின் எழுச்சியால் மெய்மறந் தான். ‘ம்’ என்று மட்டும் தலையை உலுக்கினான். சுடு வெள்ளம் வழிந்தது. மேனி சிலிர்த்தான்!

சிங்காரம் இப்பொழுது தைலம்மையைப் புதிய உரிமையின் உறவுடன் பார்த்தான்.

அவளோ, நாணத்தின் பாவையானாள். “நீங்க ஒண்னும் நெனைச்சுக்கிடாதீங்க ..... ஒங்க பேரைச் செப்பிட்டேனே!...” என்று தயவுடன் சொல்லி, தன்னுடைய ‘முறைமைக்காரனைத்’ தலை உயர்த்திப்பார்க்கவும் வெட்கப்பட்டவளாகத் தூண்மறைவில் ஒதுங்கினாள்.

அவள் பேச்சு அவனுக்கு நெஞ்சத்தில் பால் வார்த்த மாதிரி இருந்தது. “இப்பைக்கு எம்பேரைச் சொன்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/59&oldid=1386054" இலிருந்து மீள்விக்கப்பட்டது