பக்கம்:களத்துமேடு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

தோரண வாயில்

பெண், தனக்கு உயிர்ப்பான கற்பின் நிறை எனும் காப்புப் பூணுவதன்மூலம், அவளது பெண்மை உரியினும் இனிதாக அமைகிறது; உயிரினும் மேம்பட்டதாகவும் அமைகிறது. இத்தகைய புதிர் விளையாட்டின் விடைக்காகக் காத்துத் தவம் கிடக்கும் கேள்விகள் ஒன்றா, இரண்டா?

விடை, விதி வடிவம் கொள்ளும்போது, வினாவுக்கு வினை ரூபம் கொள்ளுவது தானா கஷ்டம்?.....

வினாவுக்கும் வினடக்குமா&க் கட்டுப் பாலம் அமைக்கவல்ல பெண்ணுக்கும் அவளது பெண்மைக்கும் இப்புவியிலே அமைந்துவிடுகின்ற சோதனைகளே அக்கினிப் பரீட்சையாக அமைய, அதன் விளைவாகவோ அல்லது விளையாட்டாகவோ, அப் பெண்ணும் அவளது பெண்மைச் சக்தியும் தீக்குளித்து, அந்நிலையின் முடிவாக ஊருக்கும், உலகத்துக்கும் அவள் பெயர் ஓர் உதாரணமாகவும், உத்தாரணமாகவும் ஆகின்ற நடப்பிலேதான் அவள் வாழ்வும் கனவும் கதை உருவம் எடுக்கின்றன.

இதுதான் தைலம்மையின் நடப்புச்சித்திரம்.

'தைலம்மை!'-

நாகரிகம் என்ற வெளிவேஷம் புனையத் தெரியாத-புனைய வேண்டிய இக்கட்டு இல்லாத-பட்டிக்காட்டுப் பதுமை அவள்

! பதுமைக்குப் பேசத்தெரியும். அதுவே ஓர் அதிசயம் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/8&oldid=1386071" இலிருந்து மீள்விக்கப்பட்டது