பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 154

'பொது' என அழைக்கப்படுகிறது. இரு சான்றுகள் கொண்டு அதனை இங்கு சந்தைக்காகவும், திருவிழாவிற்காகவும் சமவெளிக்குச் செல்லலாம்.நிறுவ இயலும். ஆந்திராவில் கோதாவரி ஆற்றையொட்டிய 'குடம் ரம்பா' மலைச் சரிவில் வாழ்கிற கோயா, மலைரெட்டி, கொண்ட பாகவதர்கள் முதலான மலையின மக்கள் மத்தியில் புழக்கத்திலுள்ள சாகுபடி முறைக்குப் 'பொது' எனப் பெயருள்ளதை வரலாற்றறிஞர் டேவிட் ஆர்னால்டு குறிப்பிடுகிறார் (Rebellious Hlimer: The Gudem, Rampa Risings 1839-1924, Subaltern Studies Vol 1, Oxford, 1982) இம் மலையின மக்கள் குறித்து கிறிஸ்தோப் வான்ப்பூரர் ஹெய்மன்டோர்ஃப் என்னும் மானுடவியலாளர் விரிவாக ஆய்வு செய்துள்ளார் (The Reddis of the Bison Hills: A study in occuturation, 1945), இச்சமூகம் குறித்து இவர்கள் சொல்வதைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிச் சொல்லலாம் (பார்க்க: கர்னால்டின் கட்டுரை! பக். 94-96, 115-123.)

"பெரும்பாலும் சுய தேவைப் பூர்த்திப் பொருளாதாரம்; இடம் பெயர் சாகுபடி (shifting cultivation); தளரக் கட்டமைக்கப்பட்ட சமூகம் சமீன்தார்களைப் போன்ற உள்ளூர்த் தலைவர்கள் முக்தாதார்கள்,/ முட்டாதார்கள் எனப்படுவர். காட்டைத் தூய்மை செய்து திணை, கிழங்கு வகைகளைச் சாகுபடி செய்யும் அவர்களது வழக்கமான விவசாய முறைக்குப் பொதுச் சாகுபடி என்று பெயர், ஒரு மலையாளி, தனது நெருக்கமான இரத்த உறவினர்களின் துணையோடு காட்டில் ஒரு சிறு துண்டு நிலத்தைத் தேர்வு செய்கிறார். கோடையில் அங்குள்ள மரம் செடி கொடிகளை வெட்டி, எரித்து சாகுபடிக்குத் தகுந்த வெளியாக்குகிறார், கலப்பை இல்லாத நிலையில் தாறுமாறாகக் குச்சி கொண்டு கிளறப்பட்ட நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். இரண்டு அல்லது மூன்றாண்டுகட்குப் பின்னர் அந்த நிலத்தின் உற்பத்தித் திறன் குறைந்த பின்னர் தேர்வு செய்வர். அவர்கள் மத்தியில் நிலம் என்பது வாங்க, விற்கக் கூடிய ஒரு பொருளல்ல. புளி, பலா போன்ற மரங்களின் மீது வேண்டுமானால் பாத்தியதை உரிமைகளை அவர்கள் கோரலாம். சொந்த இரத்த உறவுகளுக்கப்பால் எந்த ஒத்துழைப்பையும் கோராத (அதாவது கூலியாட்கள், குத்தகை முதலான சுரண்டல்களுக்கு வாய்ப்பில்லாத) பொதுச் சாகுபடி இது. வெளியிலுள்ளவர்களுக்கு (அதாவது சமவெளி விவசாயச் சமூகத்திற்கு) எதிரான ஒரு அடையாளத்தையும் பொது உணர்வையும் இது அவர்களுக்கு வழங்கியது .....எப்போதேனும் அவர்கள் எனிலும் பெரும்பாலும் இம்மலையாளிகள் (Hillmen) தமது பொதுச் சாகுபடியுடன் பிணைத்தே கிடந்தார்கள்"

(அழுத்தங்களும் அடைப்புக் குறிக்குள் உள்ளவையும் நம்முடையன).

என்று பொதுச் சாகுபடியை விளக்குவார் டேவிட் ஆர்னால்டு, அந்த நிலத்தை ஒதுக்கிவிட்டு வேறொரு துண்டு நிலத்தை அவர்கள்

வெள்ளை அரசு பொதுச் சாகுபடியைக் கட்டுப் படுத்தியது. காடுகளில் 'ரிசர்வ்' பகுதிகளை உருவாக்கி அவற்றில் பொதுச் சாகுபடியைத்