பக்கம்:கள்வர் குகை.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

குதிரை யனுப்புகிறேன். இப்பொழுது இந்தக் குதிரையைக் கொடு, நான் ஊர் போக வேண்டும்” என்று கெஞ்சினான். இந்தக் குதிரைதான் பாண்டியரே நல்ல குதிரை, இதை. நாளையனுப்புவதானுல் இன்று தருகிறேன். இல்லாவிட்டால் கிடையாது” என்று சொல்லி விட்டான் நம்பி! “சரி” யென்று சொல்வதைத் தவிரப் பாண்டியனுல் அப்பொழுது வேறொன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் குதிரையை வாங்கிக்கொண்டு அரண்மனை போய்ச் சேர்ந்தான். அடுத்த நாள் பாண்டியன் அரண்மனையிலிருந்து ஒரு வீரன் வந்து குதிரையைக் கொடுத்து விட்டுப் போனான். அது முதல் அந்தக் குதிரையுடன் காடு மேடு சுற்றுவதே தொழிலாகக் கொண்டான் நம்பி!

ஒரு நாள் கொல்லிமலையைச் சுற்றிக்கொண்டு வந்தான் தம்பி! ஓரிடத்தில் மலைச்சாரலில் ஏதோ மனிதர்கள் பேசும் அரவங்கேட்டது. ....சட்டென்று தன் குதிரையை நிறுத்தி ஒரு புதருக்குப் பின்னால் கட்டிவிட்டு மரத்தின் மேல் ஏறி நின்று பார்த்தான். மலைச் சாரலில் ஓரிடத்தில் மூன்று ஆசாமிகள் கூடி நிற்பதும், ஒருவன், மலைக்குக் கீழ் அடிக்கடி போய் வருவதும் போலத் தோன்றியது. மலைக்குக் கீழ் எப்படி போய்வர முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. அன்று முதல் தினமும் அதே நேரத்திற்கு அங்கே வருவான். மரத்தின் மேல். ஏறுவான்: அந்த மூன்று பேரும் பேசிக் கொள்வதைப் பார்ப்பான். பிறகு போய்விடுவான், இப்படியாகப் பல நாட்கள் சென்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/10&oldid=1475269" இலிருந்து மீள்விக்கப்பட்டது