பக்கம்:கள்வர் குகை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

யாராருடைய பொருள்களோ குவிந்திருந்தன. திரும்பி வந்து இந்த மூன்று ஆசாமிகளையும் பார்த்தான் பாண்டியன்.

அவர்கள் மூவருமே அவனுக்குத் தெரிந்தவர்கள்தான். தமிழ் நாட்டு ஆசாமி, ஒரு பெரிய பணக்காரன். அரசர் குலத்திற்கு மிகவும் வேண்டியவன். ஆனால் அவனுடைய பண ஆசைதான் இத்தனை பொருள்களையும் திருடிக்குவித்து வைக்கத் தூண்டியிருக்கின்றது. அந்த மங்கோலியர்கள் இருவரும், வடநாட்டிலிருந்து பாண்டி நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள். அவர்கள் அந்தப் புணக்காரன் - வீட்டில் வேலைக்கமர்ந்தார்கள். கடைசியாகத் தாங்கள் கொள்ளையடிக்கும் திறமையைக்காட்டவே, பணக்காரன் அவர்கள் உ.தவியால் கொள்ளையடிக்கத் தொடங்கினான். பொருள்களில் அவர்களுக்கும் அவ்வப்போது கொள்ளையடித்துக் கொடுத்ததற்குக் கூலியாகக் கொடுத்து வந்தான்.

பாண்டிய நாட்டில் பல நாட்களாக நடைபெற்றுவந்த இந்த மாயக் கொள்ளையைப் பாண்டின் இன்றுதான் கண்டுபிடித்தான். அவர்களை அரண்மனைக்கு அழைத்துப்போய்ச் சிறையில் அடைக்கும்படி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அங்கிருந்த பொருள்களையெல்லாம் அரண்மனைக்குக் கொண்டுவரச் செய்தான்.

பொருளைக் காணவில்லை என்று முன் முறையிட்ட குடி மக்களை அழைத்து அவரவர்கள் பொருளைக் கொடுத்து விட்டான். தன் அரண்மனைப் பொருள்கள் எப்படித் திருட்டுப்போயின என்பது இன்னும் அவனுக்குப் புரியவில்லை. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/18&oldid=1054841" இலிருந்து மீள்விக்கப்பட்டது