பக்கம்:கள்வர் குகை.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கள்வர் குகை

அந்தக் காலத்தில் வேடர்கள் தனித் தனியான கூட்டங் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொரு தலைவன் உண்டு. அவனே அவர்கள் வேட அரசன் என்று கூப்பிடுவார்கள். அவன் ஆணைப்படி மற்ற வேடர்கள் நடப்பார்கள். வேட்டைக்குப் புறப்பட்டுப் போகும் போது அவன் முன்னே நடக்க அவன் பின் மற்றவர்கள் நடந்து செல்வார்கள். அவன் எங்கு சென்றாலும், அவனை இரண்டு வேடர்கள்: தொடர்ந்து செல்வார்கள். வேடர்களுக்கு அவன் தலைவனுயிருந்தாலும், நகரத்தில் உள்ள அரசர்களுக்குக் கட்டுப்பட்டவன் தான். காட்டில் விளையும் பொருள்களில் ஒரு பகுதியை அவன் நகரத்தையாளும் அரசனுக்குக் கப்பமாகக் கட்டவேண்டும். இன்னும் வில் வளைக்க, அரசன் படையில் உள்ளவர்களுக்கு அவன் தன் ஆட்களே அனுப்பிச் சொல்லித்தர வேண்டும். இது போல் காட்டரசர்களுக்கும் நாட்டரசர்களுக்கும் ஒரு வகையான ஒப்பந்தம் இருந்து வந்தது.

கொல்லிமலைக் காட்டில் இது போல் ஒருவேடர் கூட்டம் இருந்து வந்தது. அக்கூட்டத் தலைவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர். நம்பி எப்பொழுதும் காடுகளைச் சுற்றிக் கொண்டு திரிவான். அவன், கையில் வில்லும் அம்பும் எப்பொழுதும் தயாராக நாணேற்றியபடி இருக்கும். குடிசைக்கு வராமலே அவன் பல நாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/6&oldid=1475172" இலிருந்து மீள்விக்கப்பட்டது