பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுகு g?

விசுவம், நீ போய் Casi இல் உட்கார். காஷியர். இன்ஸ்பெக்டருக்கு ஒத்தாசையா நோட் எண்ணட்டும், முத்தையா, இன்ஸ்பெக்டரை எதிரே வெச்சுண்டே என்ன உளர்நதுன்னு கிடையாதா? வழியிலே போறவன் வரவன் எல்லாம் Bank record இலே கைவெக்கறான்னு, இனிஸ் பட்டன் எளுதிட்டுப் போகணுமாக்கும் என் மண்டையை உருட்டலுமாக்கும்!”

வழியில் போறவன் இல்லேசார். என் அக்கா மகன் சார்” சிவராமனுக்குக் கிளுக்கென்று சிரிப்பு வந்தது. உச்சந்தலையைப் பலமாகத் தட்டிக் கொண்டான். மானேஜர் கர்ச்சிப்பை எடுத்து மூக்கை அதனுள் சத்து மாக ஊதிக் கொண்டார். இங்கே ஏதோ பாஷை நடக் கிறது. விசுவம் முகத்தை வெறிச்சாக வைத்திருப்பதே ஒரு உச்சரிப்பாயிருந்தது. எனக்கு மு த் ைத யா மே ல் எக்கச்சக்க எரிச்சல் மூள்கிறது. எனக்கு வெட்க மாயிருக்கிறது.

‘‘QP 3355uor, you are impossible!”

‘நாற்பது நாளிலிருந்து பத்துமாதம் வரைப் பிள்ளை தாச்சிக் கணக்கில் அதுக்குமேலே யானைகர்ப்ப மெல்லாம் கூட இருக்குது - எனக்கென்ன ரகம்ரகமா துங்குதே. சிவராமன் மேஜை ட்ராயரை இளுத்துப்பாருங்க-’

சிவராமன் நறநறவென்று பல்லைக்கடித்தான்.

Shut up-"மானேஜர் விசுவம் காலி பண்ணிவிட்ட கெளண்டர் நாற்காலிமேல்ஏறி உட்கார்ந்துகொண்டார். எனக்குத் திக்திக் முத்தையாவை முழங்கைச் சட்டை யைப் பிடித்து இழுத்தேன். நீ சும்மாயிரு அம்பீ!’ முத்தையா உதறிக் கொண்டான். கஸ்டமருங்க :ாள் புக்குக்குப் பிராணனை வாங்கறது எனக்கல்ல தெரியும்: எதிருக்கெதிர்பட்டாலே திருடன் மாதிரி ஒடி ஒளியற புளைப்பா போச்சு. இது என்தலையெழுத்து”

க. 7