பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

‘பத்து ரூபாக்கத்தைத் தச்சதே இன்னிக்கு ஒண்னு தானுங்க. அங்கேயும் இங்கேயுமாப் போனோமா, அதுக்கு மேலே நேர மில்லை. அதனாலே காணாமல் போன கட்டு அடையாளம் எனக்கு நல்லா நெனப்பு இருக்கும்.”

“சரி முத்தையா, உன் மகன் நிசம் சொல்றான்னு என்ன நிச்சயம் ? துரங்கி வழிஞ்சு கனவு கண்டானா ? இல்லை சித்தப்ரமையா ? இல்லே படா கில்லாடியா ? நானே அவனைக் Cash கொண்டருக்குக் காவல் வெச்சேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். எல்லாரும் சந்தேகத்துக்குரியவர்களே. சரி சரி நீ இப்போ ஏதேனும் ஆரம்பிக்க வேண்டாம். உன் பழைய பல்லவி உன் அக்கா மகன் - இப்போ என்ன செய்யலாம்? மேஜை மேல் விரல்கள். தாளம் போட்டன. பெருமூச்செறிந்து ஏதோ தீர்மானத்துக்கு வந்தவராய் எழுந்தார்.

இங்கு நாம் உட்கார்ந்து வெறும் வார்த்தைகளை மென்று தின்று கொண்டிருக்கையிலேயே, காணாமல் போன நோட்டுக்கள் கடைத் தெருவில் பங்காகி விடும். முத்தையா, நீ உடனே, இன் ஸ்பெக்டர் லாட்ஜூக்கு சைகிளை மிதி. அவர் கோவிலுக்குப் போவனுமாம். நீ இல்லாமல் அவர் பறந்து போவாதபடி அவர் மேல் உஷாராயிரு. நான் வரதுக்கு முன்னாடி அவரை எங்கே யும் போகவிடாதே. ஏதாச்சும் பேச்சுக் கொடுத்து நிறுத்திவை. அப்பறம் போற வழியில்-கொஞ்சம் கிட்டவா”- காதோடு ஏதோ. முத்தையா தலையைப் பலமாக ஆட்டி விட்டுச் சிட்டாய்ப் பறந்தான்.

‘Cashier, ஒரு டாக்ளி பிடியும். இதன் செலவு உம் தலையில் தான். அத்தோடு விட்டால் உன் அதிர்ஷ்டம். எனக்கும் சேர்த்து ‘ஆபதாமப ஹர்தாரம்” சொல் விண்டிரு, நான் திரும்பி வரும் வரை. அம்பி நீ என்னோடு வா. சிவராமா, விசுவம் நீங்கள் இருவரும் இங்கே காவல்

க-8.