பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13? r

வேண்டும்? பின்னாடி கை கோ ர், த் த. வண்ணம் ஸ்து பியின் உச்சியில் விரிந்த இதழ்கள் மேல் பார்வை. ஆழ்த்தது. எந்நேரமோ?

என் பக்கம் திரும்புகிறார். கண்கள் என் முகத்தைத் துருவுகின்றன. ஏன் அங்கு இத்தனை வேதனை :

‘அம்பி, நான் அவசரப்பட்டு விட்டேனோ ? என் தோளை உலுக்குகிறார். என்ன, எதற்கு, ஒன்றும் புரிய வில்லையே! விழிக்கிறேன். புரியாமலும் இல்லை. என் ராசியே இப்படி நெய்யிலும் நெருப்பிலும்ாய்ச் சுட்டும் பொரிந்தும் ஊசலாடுவதுதானா? வாசல் வரைவந்தேன் உள்நுழைவது உன் திருவுளச்சீட்டா ?

“கிருஷ்ணா!” இருளில் கூடுக்கு வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு பருந்து, வழித்துணைக்குத் தன் குரலைக் கொடுத்துக் கொள்கிறது.

அசரீரி கேட்டது தானோ என்னவோ அந்த முகத்தில் சஞ்சலம் படிப்படியாக அடங்கி, முகம் தெளிவதைத் தெள்ளெனக் காணமுடிகிறது.

“ஒன்றுமில்லை, பயப்படாதே. நம்மை பயமுறுத்து வதே நம் நிழல்கள்தானே!” என் முதுகைத் தடவுகிறார். என்னுள் எலும்பு கதகதப்பாய் உருகுகிறது. அவர் முகத்தில் புன்னகை படர்கிறது. ஆனால் புன்னகையா அது: மார்பில் தழும்பை மூடும் பதக்கம் போலும், நெஞ்சின் புன்னகை என்கிற பெயரில் மறைக்கிறார். ஏதோ ஒரு நகையா?

ஆனால்-மற்றது எதுதான் எனக்குப் புரிந்து: விட்டது?

“சரி வா, உள்ளே போகலாம்-’

நாலு படிக் கட்டுகளின் உயரத்தில்தான் வீடே. தத்தித் தாழ்வாரம் தாண்டி வாசல்.