பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 60m. &. Jrfr.

கோமுவா ? கோஷாவா ?

o {} Ο

குடும்பம், விசுவாசம், நன்றி, பாசம் இதெல்லாம். நாளாக ஆக வெறுமெனப் பொழுதுபோக்குக்குக் கட்டி விட்ட கதையாகி விடுவதைக் கண்ணெதிரே பார்க்க ஏதோ திகிலாயிருக்கிறது.

இந்த துர ர த் தில் காமுப்பாட்டியை நினைக்கத் தோன்றாமல் இல்லை. மண்ணைப் போட்டு வளர்த் தாளோ, கல்லைப் போட்டுவளர்த்தாளோ, கடுஞ் சொல் லைப் போட்டு வளர்த்தாளோ, வளர்த்தாள்.

ஒரு நாள் அவளைப் பார்க்கணும்.

{ } d இந்த வீட்டில் பூஜை அறை இருக்கிறது. மூன்று புறங்களிலும் சுவரை அடைத்த பெரும் படங்கள். ரவிவர்மாவின் லக்ஷூமி, சரஸ்வதி, தமயந்தியும் அன்னப் பறவையும். .

பார்வதியையும் பிள்ளையாரையும் இருமருங்கிலும் அணைத்துக் கொண்டு. முறுக்கிய மீசையுடன் சிவன், ஆணழகன். காலடியில் ரிஷபமும் சிங்கமும். இன்னொருபடம்: ஆகாச கங்கையை வாங்கிக் கொள்ள விரித்த சடை யோடு, அண்ணாந்து, ஒரு அலகதிய செளரியத்துடன், கைகள் இடுப்பில் வைத்தபடி சிவன்.

ஒருபக்கம் ரிஷபத்தில் சாய்ந்தபடி பார்வதி. மறுபக்கம் கூப்பிய சுைகளுடன் தாடிவாலா பகீரதன், ஆகாயத்தில், அவன் பிரயத்தனம் கோபகங்கா. சமுத்திரத்தின்மேல் அம்பை எய்துவிட்டு நிற்கும் கோபராமன்.