பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா.

நீளமாகிக் கொண்டிருக்கிறது, அவன் காலடியில் மணல் கரைந்து கொண்டிருக்கிறது. இன்று ஞாயிறு. நாளைக்குள் அவனுக்குத் தகவல் சொல்லியாகணும்.

‘அம்பி! முதுகுலே நரம்புப் பிடிப்பு. கொஞ்சம் மிதி யேன்!'”

மிதிக்கறதா? எனக்கு உதறல் எடுத்துக் கொண்டது. கை கூப்பி மாட்டேன்’ தலையை அசைத்தேன்,

வலிக்கிறதப்பா!”

“பிடிச்சுவிடறேன் லார்!”

“ஏதேனும் செய்.”

சற்று நேரம் மாலிஷ-க்குப்பின் அவருக்கு இதவுகண் -து போலும் ‘அம்மாடி பரவாயில்லையே!”

“ -art)m fr * *

“yes?”

  • G*”

‘ வலார், ஷார் ...” ‘சரிதான், ஊசியைத் தள்ளி விடப்பா!” அவ்வளவுதான். விஷயத்தைக் கக்கி விட்டேன்.

தேங்கிய மெளனம். இம்சையாயில்லை. எப்படி யிருந்தால் என்ன? மடியைவிட்டு கனம் இறங்கியாச்சு,

மானேஜர் உடல் நிறம் ஒரு சமயம் போல் இல்லை. குளித்துவந்தவுடன் த க் கா எரி ப் பழம் மா தி ரி ‘டால் அடிக்கிறார். நேரம் ஆக ஆக ஒரு மாதிரியாக வெளுத்துக் கொள்கிறார். சில சமயங்களில் கறுப்புக் காட்டுவது போலக் கூடத் தோன்றும் உடல்வாகா? அல்ல அவர் தான் படுவதாகச் சொல்லும் பல நோய் வாகா? இப்போ என்ன நிறம்? இது என்ன வ்யவஸ்தை கெட்ட யோசனையோ?

“அப்போ நீ முதலாளியாகப் போறியாக்கும்!”