பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு அவனுக்கு விஷயம் என்ன தெரியும்? No that is too much’ ii expect!” சிரிக்கிறார். புகை கக்குகிறது. That is not fair to you அம்பி, பாலாவை நீ அழகென்று நினைக் கிறாயா? எப்படி?”

பாலா அழகா இல்லையா ? என்னைக் கிண்டல் பண்ணுகிற சமயம் இதுதானா ? அவர் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.

‘அம்பி, அழகாகவே பிறக்கப்படாது. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்பதுதான் பாந்தம் பத்ரம். பாலா வைக் கூட நான் அழகென்று ஏற்றுக் கொள்ளமாட்டேன். இது அமானுஷ்யம் (என் பாஷை பேசுகிறாரே!); விபரீதம். abnormat வரம்பு மீறின கேஸ். இப்ப பாலா கொஞ்சம் மங்கிப் போய் விட்டாள் என்று சொல்ல வேண்டும். பத்து வயசுலே, அப்பா சும்மா டால் வீசு வாள் உடல் வாளிப்பு. No. நான் சுருக்கச் சொல்லி முடிச்சுடனும்.

‘அன்று தை வெள்ளிக்கிழமை. தாயும் பெண்ணும் மங்கலஸ்னானம் செய்து நேம நிஷ்டையாக ராகுகாலத் துக்கு முன்னால் மாவிளக்கு ஏற்றி, மலையும் ஏத்தியாச்சு, பாலா பள்ளிக் கூடத்துக்குப் போறவழியில்- கொஞ்சம் தள்ளிப் போகனும், தெரிஞ்ச மாமிக்கு ப்ரசாதத்தைக் கொடுத்து விட்டுப் போகச் சொல்வியிருக்க ள். அவ்வளவு தானி ,

‘மாலை, பாலா பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிவர வில்லை. நேரம் மீறிப் போனதால் பள்ளிக் கூடத்துக்குக் கேட்டு அனுப்பியிருக்கிறாள். ‘இன்னி பூரா பாலா பள்ளிக் கூடத்துக்கே வரல்லியே ” வயிறு பகீர்’. மாவிளக்குப் பிரசாதமும் மாமியிடம் போய்ச் சேரவில்லை. ‘அனுப்பிச் சேளா ? பாலா இந்தப் பக்கம் வரல்லியே !” எப்படி யிருக்கும் ! பிறகு எனக்குச் சொல்லியனுப்பினாள்.

‘மணி ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, போலீசில் எழுதி வெச்சாச்சு. ஊர் முழுக்க சல்லடை போட்டு சலிச்சாறது.