பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 20

போகட்டும் பார், பண்ணுகிற அ ம ர் க் க ள த் தை , கோபால் காப்பிக் கடையில் கொஞ்சம் லேட்'ஆயிடுத்து வார், ! ‘ஏன் அவனுக்கு ஒத்தாசையா ரெண்டு வடை தட்டிப் போட்டையா ?’

சே, நம்ம மானேஜர் எங்கே அப்படியெல்லாம் கேட்கிறார் ?” ; - *

“அவர்னா அவரா? அந்த ஆபிஸர் கூட்டம், நம்ம யூனியன் General Body கூட்டத்தில் என்னென்னெல்லாம் அடி படறது, அப்போ உன் கவனம் குப்பை மேஞ். சுண்டிருந்ததோ ?’

‘இல்லை, ரெண்டு வடை தின்று கொண்டிருந்தேன்,”

அன்று மாலை மானேஜர் பெயருக்கு ஒரு தந்தி வந்தது. எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போகிறேன். நல்ல வேளை. வாசலில் நிற்கிறார். என்னைப் பார்த்ததும் முகம் மலர்கிறது. உஷ்” உதட்டின் மேல் விரலை வைக்கிறார் சமையலறையில் இருக்கிறாள். தானே. எழுந்து என்னவோ செய்து கொண்டிருக்கிறாள். தந்தியைப் பிரிக்கிறார் முகம் மாறுகிறார்.

‘என்ன ஸார்?” ஆண்டவனே, இன்னும் என்ன பாக்கி.

“எல்லாம் நல்லது தான். உன்னைப் பற்றித்தான்? congratulations. 2-6i G Clerk Lig Glori esir Gaza G3 e கோவைக்கு மாற்றல் உடனே ட்யூட்டி சேரனுமாம். சட்டம், உரிமை பேசாமல் புறப்படு. இன்று இரவே புறப்படு”

அப்போ, உங்களுக்கும் என்னைத் தட்டிக் கழிக்க வாய்ப்பு கிடைச்சுப்போச்சு. ஆனால் எனக்கும் பாலா முகத்தில் முழித்துக் கொண்டு இந்த வீட்டில் இருக்க இனி ஏது வழி? நீங்களும் தான் என்ன செய்வீர்கள்?

முத்தையா அவன் மனைவிக்கு சிகிச்சை சம்பந்த, மாக வேலூரில் இருக்கிறான்.