பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 @f

பழகிப் போன கதை.

ஊஞ்சல் மேல் கவிழ்கிறேன்.

மாலை மாருதத்தில் ஆடும் ஆலம் விழுதுச் சரங் களினூடே, அஸ்தமனத்தின் ஆரஞ்சுத்திட்டு படபடக் கிறது. பிட்டுமாவுபோல் வானத்தில் .ெ ச ந் தி ட் டு அங்கங்கே விள்ளல்விட்டிருக்கிறது. இன்னும் சரியாகக் கரையாக வெல்லக்கட்டி போல், சூரியன் பாகுவிட்டுக் கொண்டு, கனிந்த சூட்டில் மினுமினுக்கிறான். பட்டாம் பூச்சிப்போல, பழுத்தபுளிய இலைகள் காற்றில் அலைந்து வந்து என்மேல் பெய்கின்றன. அத்துடன் ஒன்றிரண்டு பூக்களும் தலைமயிரில் ஒட்டிக்கொள்கின்றன. ஊஞ்சலில் மாட்டிய புல்லாங் குழல், என் இதயத்தில் விழித்துக் கொண்டு ஏதோ மர்மராகம் ஊதுகிறது. நெஞ்சில் தேன் சொட்டுகிறது. எல்லோரிடமுந் தான் குட்டிசசாத்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. உன்னிடம் இருப்பவனிட மிருந்து நீ எங்கே ஒடிப்போவாய்? -

இதய நரம்புகள் ஏதோ சுருதியில் சேர்ந்து, அல்லது சேற முறுக்கேறுகையில் அங்கே ஏதோ நோக்காடு, உள் கவிந்த இன்ப மூட்டத்துக்கு முதுகுகொடுத்து விண் விண் தெறிக்கிறது.

கண்ணைமூடி, இமைகளுள் இமய வியாபகத்தில் ஒரு முகத்தை எழுத முயன்றேன். ஒவ்வொரு சமயம் திட்டுப் படர்கிறது. ஒரொருசமயம் புன்னகையின் ஒளிமட்டும் காட்டி, உருவம் காட்டாது உருகி, விழியோரம் உறுத்தி கன்னத்தில் வழிகிறது. நான் கண்ணிரைத் துடைக்க முயலவில்லை.

ஏ, காமுப்பாட்டி, நீ கெட்டிக்காரிதான். ஆனால் எல்லாத்தையும் என்னிடமிருந்து பிடுங்கிட முடியுமா . பிடுங்கிக்கனுமா? உனக்கு இத்தனை வயதாகியும்? இத்தனை சிறுவன் என்னை உனக்கே இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ளணும்னு பாக்கறையே, எனக்கே என்று