பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 8%

இருபத்தி ஏழாயிரம் வலிகள் இருபத்தி ஏழாயிரம் தனித்தனி வாய்கள் ஒரே சமயத்தில் இருபத்தி ஏழாயிரம் தனித்தனிக் கடிகள் வலியின் பற்களின் தனித்தனி அழுந்தல்கள். ‘இல்லேடா கண்ணு ‘ அவனிடம் பொங்கும் தாய்மையில் மெத்தென்று மூழ்கிப் போய்க் கொண்டிருந் தேன்... “நான்தான் முத்தய்யா கொஞ்சம் பொறுத் துக்க.” தோள் மேல் அப்படியே சார்த்திக் கொண்டு எழுந் தான். மெத்து மெத்தென முத்தையா. முத்தய்யாதான் மத்யமாவதி. அப்புறம்- அப்புறம் ? தெரியா-ஆஆஆ............

{ { {}

நான்

‘முத்தையா இன்னும் வல்லியா? இன் னி க்கு ம் வழக்கம் போல் தானா ?”

கேட்டுக் கொண்டே நாங்கள் உள்ளே நுழைந்து விட்டோம். இரண்டு படிக்கு ஒரு தாண்டல்-செங்குத் தான மாடி. இந்த வயசில எப்படி?- என்னால்...ஹஅம்:

‘.என்ன ஸார், என்னிக்கு நான் லேட்? கடியாரத் தைப் பாருங்க. வாய்க்குவந்தபடி சாடlங்களே !”

‘முத்தையா யார் வந்திருக்காங்க பார். அப்புறம் உன் கரடிக்கத்தலை வெச்சுக்கோ.’

மானேஜருக்கெதிரே ‘டிப்டாப்பா உடுத்திக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

வணக்கமுங்க” கை கூப்பிக்கொண்டே முத்தையா விழித்தான். .