பக்கம்:கழுதை அழுத கதை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

യ്യഗുണ്ടൂ ിലു77്

அவ் அவலக் கரட்டுக் குரலொலிகளைக் கேட்டு வருத்தமுறுகின்றது!.. அதில் ஒன்றி நிற்கின்றார்!.

அவற்றைப் பார்த்துக்கொண்டும் - அக் குரற் பொருள்களை உன்னிக்கொண்டும் இருக்கையில் - ஆற்றங்கரைக் காற்றின் மெல்லிய இன்வீச்சு, ஆசிரியரைப் படிப்படியே கண்பாடு கொள்ளச் செய்துவிடுகின்றது. ஆழ்ந்த அயர்ந்த அருமையான உறக்கம் ஆங்கு ஆட்படுகின்றது.

அக் கண்துஞ்சலுக்குள் - கனவின் முடி விரிந்து காட்சிகளாகத் திரைப்பாடு கொள்கின்றன! அக் கனவில், இவ் ஆசான் கண்ட காட்சிகளின் தொடர்ச்சித் தொகுப்பே "கழுதை அழுத கதை" என்னும் பாவிய இலக்கிய எழுத்தோவியமாகி - நம் முன் பார்வைக்கும் ஓர்வுக்குமாக நேர்வைக்கப் பெற்றுள்ளது! .

காலைப் போதில் கண்ணயர்வு. இடைவெளி யிலாத ஆழ்ந்த துயில். அரைக் கிழமான தாய்க் கழுதை உரைக்கத்தலில் தொடக்கமாகிய கனவுலக உலா மிதப்பு. கனவு மிதப்பின் அறுதியாகிய இறுதியில்..அத் தாய்க் கழுதையின் ஒரே மகளாகிய சேய்க் கழுதையின் விசும்பல் விசிப்பொலியிழுப்பானது - இழுத்துக் கவ்விக் கொண்டிருந்த அவரின் நெட்டுறக்கத்தைக் கலைத்து விழிப்புக்கு வித்திட்டு உசுப்பிவிடுகின்றது! ஆசிரியரின் கண்ணிமை விதை முடிகள் விளர்கின்றன!. முழு. விழிப்பு. காலைப் போழ்தோ - இப்போது மாலைப் போழ்து! ஒலிகளும் ஆங்கு இல!. ஒப்பாரியோல வுரிமைக் கழுதைகள் இரண்டும் ஆங்கு இல!. சுற்றும் முற்றும் கலாவலான பார்வை வீச்சோடு ஆசிரியர் அலமருகின்றார்!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/10&oldid=665304" இலிருந்து மீள்விக்கப்பட்டது