பக்கம்:கழுதை அழுத கதை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഗ്ര്യാദ്രഗു ിലന്തൂ്.

'நன்று வினவினை, நீ!

நள்ளிரவில் கள்ளரல்லால் நட்ட நடுக்காட்டில்

நல்லோர் வருவாரோ? 675 திட்டமுடன் கேள்நீ!

திருடரென அன்னவரை நாட்டோர் உரைப்பார்கள்!

நம்போல் விலங்கிடை, இக் காட்டுமனம் சூழ்வதில்லை.

கள்ளமிட்டும் வாழ்வதில்லை.

மக்களிடை இன்றிருக்கும்

மாண்பில்லாக் கீழ்மைகளுள்

ஒக்கவிது வொன்றாகும்!

உண்மைநிலை இன்னுங்கேள்: 680

உண்ணும் உணவை

உழுது விளைவிப்பார் உண்ணா துயிர்வருந்தும்

ஒட்டை உலகமிது!

கட்டும் உடைநெய்யக்

காலமெல்லாம் தேய்ந்திடுவார்

கட்டத் துணிக்கலையும்

கல்மனத்து மாந்தரிவர் !

மக்கள் குடியிருக்க

மண்ணாலும் கல்லாலும் 685

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/108&oldid=666321" இலிருந்து மீள்விக்கப்பட்டது