பக்கம்:கழுதை அழுத கதை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

യ്യാഭ്രസ്തു ശ്ലോ

ஈங்கிவற்றின் சூழ்வில்

இருளில் புதையுண்டு தாங்கவொண்ணா வெம்பசியைத்

தாங்கிவரும் ஒர்கூட்டம் என்னதான் செய்யுமிங்கே?

எப்படித்தான் வாழ்ந்துவரும்? தின்னத் திருடுமன்றோ?

தீங்குசெய்ய முந்துமன்றோ?

எல்லார்க்கும் எல்லா

நலமும் இயைவதென்றால், இல்லார்க்கும் கேடில்லை;

ஏய்ப்பார்க்கும் வாய்ப்பில்லை! அந்நாள் வரையிலும்

ஆக்கம்போல் வீழ்விருக்கும்! அந்நாள் வரத்தான்

அறிஞர் முயல்கின்றார்

மக்கள் உலகின்

மனம்வெதும்பும் செய்திகளை

ஒக்க உரைப்பதெனில்

உள்ளம் கொதிப்பேறும்!

ஊரென்றும் நாகரிகம்

ஒங்கும் நகரென்றும்

பேர்கொண்ட தல்லால்

பெருமை துளியுமில்லை!

69

700

705

710

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/110&oldid=666323" இலிருந்து மீள்விக்கப்பட்டது