பக்கம்:கழுதை அழுத கதை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2g* ダ@2ó の列の2タ

தட்டி யெழுப்பிடவும்

தாய்க்கழுதை மெய்பதறி, 720 துண்ணென் றெழுந்தோடி

வீட்டினுள்ளும் தோப்பினுள்ளும் 'கண்ணே! மணியே!

கழுதைகுலப் பேரணங்கே! முத்தே! பவழமே!

முன்பிறந்த வார்ப்படமே! தத்துநடை மானே!

தளதளக்கும் பொன்னுடலே! எங்கேடி போய்விட்டாய்?

என்ன துயரமடி? 725 'இங்கே இவளென்னை

எப்படித்தான் காத்திடுவாள்? என்று கருதி

எனைவிட்டுப் போனாயோ?"

- என்று கதறி

இருகண்ணில் நீர்வார, நொச்சிமரக் கூட்டத்துள்,

ஓங்கும் நுணாக்கடியில், பச்சைப் புதர்க்கிடையில்

பாழ்ங்கிணற் றுக்குள், 730 சலசலத்து ஒடுகின்ற

ஒடையெல்லாம், பார்த்து, வெலவெலக்கக் கால்கள்,

உடலம் வெயர்த்தொழுகத் தேடிக் களைத்ததுவாம்!,

காளையண்ணன் தேற்றலுக்கும்

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/113&oldid=666326" இலிருந்து மீள்விக்கப்பட்டது