பக்கம்:கழுதை அழுத கதை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഭസ്മ ைைதசத்தின்அரசி

வெள்ளத் தொளைகளெல்லாம்

வீற்றிருக்கும் நச்சுயிர்கள்! 890 வானை மறித்த

முகில்களைப்போல் ஆங்காங்கே யானை முறித்த

மரக்கிளைகள் வீழ்ந்திருக்கும்!

நெட்டைவால் மந்தியினம்

நீண்ட கிளைகளிலே

ஒட்டிக் கிடந்தே

இரவெல்லாம் கூச்சலிடும்!

குட்டைத் தலையும் -

குறுங்கழுத்தும் கூனுடலும் 895 முட்டை விழியும்

முகத்தில் அழுந்தியுள்ள சப்பைச் சிறுமூக்கும்

சார்ந்திருக்கும் ஆந்தையினம் ஒப்பாரி வைத்தே

இராமுழுதும் ஒலமிடும்!

சில்வண்டுக் கூட்டம்

இரவில் சிலைவாங்கும்! முல்லைப் புதர்களிலே

மொய்த்திருக்கும் தேனீக்கள்! 900

வேங்கை உருமல்

விலாவைக் குடைந்தெடுக்கும்!

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/130&oldid=666343" இலிருந்து மீள்விக்கப்பட்டது