பக்கம்:கழுதை அழுத கதை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂഗു ു്

நொந்தஉளத் தோடு

கழுதையம்மை நோக்கிற்று! நீண்டு சிலிர்த்து

நிறைந்த பிடரிமயிர்! பூண்ட தொருநீள்வால்:

பூரித்து நின்றமறம்!

திண்ணிய கால்கள்!

திசைகாட்டும் முள்மீசை! கண்ணில் நெருப்புருண்டை!

கால்களிலே கூருகிர்கள்: 930 தாமரை நாத்தொங்க

தாடைவாய்ப் பல்தெரிய மாமல்லன் வீறுடலம்

மண்ணில் கிடப்பதுபோல் ஆணரிமா தன்கால்

அடியில் கிடந்ததனை மாணப் பெருமையென

எண்ணி மதித்தாலும், பெட்டைக் கழுதைக்குப்

பேச்சுமில்லை; மூச்சுமில்லை! 935

வெட்டுண்டு சாய்ந்தாலும்

விறுமிகக் கொண்டவர்முன்

கோழையர்கள் என்றுமிகக்

கோழையரே இவ்வுலகில்!

ஏழையர்முன் செல்வம்

இழந்தவருஞ் செல்வரன்றோ?

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/134&oldid=666347" இலிருந்து மீள்விக்கப்பட்டது