பக்கம்:கழுதை அழுத கதை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്ഠഭൂഗു ിലന്തൂ

பதவிக்கே உள்நாணிப்

பாவைக் கழுதையிடம்,

"அம்மா, கழுதையே!

அஞ்சாதே! நானேதான் 960 இம்மா பெருங்காட்டில்

எல்லா விலங்குகட்கும் வல்லரசன் முன்மாலை

வந்த விடத்திலிங்குக் கொல்லப் படவிருந்தேன்;

கூற்றுவன்போல் வந்தொருவன் வேட்டெஃகத்தால் சுட்டென்னை

வீழ்த்தி யிருப்பான்காண்!

வேட்டொலியைக் கேட்டவுடன்

வேலிக்குள் ஒடிவிட்டேன்! ^65 ஆனாலும் காலில்

அடிபட்டு வீழ்ந்துவிட்டேன்! போனாலும் போயிருப்பேன்;

பொல்லாத வேளையிலும் நல்லதொரு நேரத்தால்

நான் பிழைத்துக் கொண்டேன் காண்!

காலில்தான் நல்லஅடி!

மற்றோ கவலையில்லை! ஏலவில்லை ஊன்றிடவே!

என்செய்வ" தென்று), அரிமா 970 நோவால் மிகவருந்தி

நொய்யவுரை செய்ததுவே!

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/138&oldid=666351" இலிருந்து மீள்விக்கப்பட்டது