பக்கம்:கழுதை அழுத கதை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്ഠഭൂഗു സ്പെ

'தக்கநிலை வாய்ந்திடுமுன்

தாங்கள் நடந்திடவும் 985 கூடா" தென வுரைத்து,

"வல்விலங்கின் கோவேந்தே ! ஆடாது அசையாது)

அயர்ந்திருங்கள் காலைவரை. நாளை விடியட்டும்!

தாங்கள் நலமுற்றால் மீளுவோம்" என்று

மிகநயந்து வேண்டியதாம்!

'அந்த இராத் தங்கி

அடுத்தநாள் காலையிலே 990 சொந்தவிடம் செல்வோம்

எனக்கழுதை சொன்னவுடன் வல்லரிமா ஒப்பியே,

வாகாய்ப் படுத்துறங்க நல்லவிடம் ஒன்றையெண்ணி நாற்புறமும் கண்சுழற்ற, அக்குறிப்பைத் தானுணர்ந்த

அன்புக் கழுதையம்மை தக்கதென ஒரிடத்தைத்

தேடித் தழை, இலைகள் 995 சேர்த்துக் குவித்திட்டுச்

செப்பமுறத் தாம்பரப்பி ஆர்த்த பிடரி -

அடலேற்றைப் போயனைத்துக் கொண்டுவந்து மெல்லக் - குனிந்து படுக்கவைத்தே

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/140&oldid=666353" இலிருந்து மீள்விக்கப்பட்டது