பக்கம்:கழுதை அழுத கதை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാ ാ

நீவிக் கொடுக்க,

நெடுந்துக்கம் தான்களைந்து

தாவி எழுந்துநிற்கத்

தன்காலை ஊன்றியதும்

பொத்தென்று மீண்டும்

பொதிபோல வீழ்ந்ததுவாம்! 1020

மெத்தென்று இலைதழைகள்

மேவி யிருந்ததினால் ஒன்றும் அடியில்லை!

உள்ளம் பதறிடவே நின்ற கழுதையம்மை

நீள நினைத்துப்பின் தக்கதென ஒர்முடிவைத் . தான்தேர்ந்து, வல்லரிமா

பக்கம் அமர்ந்து பணிவாக

"ஐயாவே! 1025 எப்படியும் உங்கள் .

இருப்பிடத்திற் கேகுவதே இப்பொழுது தக்கதென

எண்ணுகின்றேன். நீங்களிதைத் தப்பென்று கொள்ளாமல்

தக்கதென்றே எண்ணி,மனம் ஒப்புவிரேல் நானொன்று)

உரைக்க விரும்புகின்றேன்."

103.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/144&oldid=666357" இலிருந்து மீள்விக்கப்பட்டது