பக்கம்:கழுதை அழுத கதை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലാ

என்முதுகின் வன்சுமையை

இம்மி உணரவில்லை"

என்று கழுதை

இனிதுரைக்க, வல்லரிமா,

"நன்று பெண்னே! நீ வாழ்க!

நான்உன்போல் கண்டதில்லை! குன்றுபோல் அன்பு

குவித்தநெஞ்சம் உன்நெஞ்சம்! நல்லறிவு நற்கடமை

வாய்த்திருக்கும் நல்லவள்நீ! 1085 சொல்லரிய துன்பச்

சுமையோடு என்னையும்நீ தூக்கிச் சுமந்து

துயர்போக்கி வந்தாய்கர்ண் 1 காக்கின்ற மாவரசன்

தன்னைநீ காத்துவிட்டாய்! காட்டு விலங்கரசன்

கட்டளைகேள்! இன்றுமுதல் நாட்டுவிலங் கானஉன்னை

நல்லமைச்சர் ஆக்குகின்றேன்! 1090

ஈங்கிதுகாண், பெண்ணே!

இருப்பைக்காடு) இக்காடு.

பாங்காய் இதன்பரப்பைப்

பார்த்திருக்க மாட்டாய், நீ!

சொல்லுகின்றேன் கேள்;அதன்முன் என்னைச் சுமையிறக்காய்!

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/150&oldid=666363" இலிருந்து மீள்விக்கப்பட்டது