பக்கம்:கழுதை அழுத கதை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഠഭൂു ിലുr്

பின்னர் விலங்கரசன்

பேசநின்று, "மாக்களே!

இன்னே இதோ நம்மின்

கண்முன் இருக்கின்ற

பெண்கழுதை தன்னைப்

பிழையாக எண்ணாதீர்!

உண்கின்ற நல்லிரையென் றெண்ணி உவக்காதீர். அன்பர்! இதுகழுதை

ஆனாலும் மாந்தரினும் அன்பு மிகுந்ததுவாய் - நானும் அடிபட்டுச் சாய்ந்து கிடக்கையிலே

சாகா தெனைக்காத்துத் தாய்போல் பரிந்தெடுத்துக்

காட்டுத் தழைபிழிந்து, கண்ணுறங்கா தோரிரவு

காத்திருந்து காற்பட்ட புண்ணாற்றி இங்கே

பொதிபோல் சுமந்துவந்தே

உங்கள் முன் விட்டதனை

உங்களிலே யார்செய்வார் ?

உங்கள்மேல் ஆணை!

உலகின்மேல் காய்கின்ற

வெங்கதிர்மேல் ஆணை!

விளையாட்டிற் கானாலும்

tio

1115

ft20

{125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/154&oldid=666367" இலிருந்து மீள்விக்கப்பட்டது