பக்கம்:கழுதை அழுத கதை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാ

நீவிர் முழக்குகின்ற

நெட்டையறம் என்ன? அதன் 1245 ஈவுநிலை என்ன? என்றே

எங்கட் குரைப்பீரோ?

உங்களுக்குள்-உங்கள்

ஒருவரையே தாழ்த்துகின்றீர்!

எங்கள் இனத்திலில்லா

இந்நிலையோ உங்கள் அறம்?

பல்லோர் பொருளைப்

பறித்தொருவ ரே, வாழ்வீர்!

சொல்லுங்கள்! ஈதோ -

பொருளென்று சொல்லுவது? 1250

அன்பெனவே பேசி

அளவில்லாப் பெண்டிரையே

இன்பத்திற் கேய்க்கும்

இதையோ, நீர் இன்பமென்றி !

கள்ளம், கரவு, இழிவு!

காலமெல்லாம் பொய்வாழ்க்கை! 'உள்ளம் என்றே இவ்விடையில்

ஓங்கிக் கதறுகின்றீர்! உங்களிலே, கோடியிலே,

'உள்ளம்' எனுமுயர்ந்த 1255 பொங்குதமிழ்ச் சொல்லின்

பொருள்-ஒருவர் கூறுவரா?

125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/166&oldid=666379" இலிருந்து மீள்விக்கப்பட்டது