பக்கம்:கழுதை அழுத கதை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല0-ഉഠഭൂു മാ

இப்பேதை கேட்கின்றேன்;

என்னதான் சொல்கின்றீர்? 1270

தெய்வத் திருக்குறளைத்

தேர்ந்த அறநூலாய் - உய்வுதரும் வாழ்க்கைக்கே உற்ற உயர்நூலாய்க் கொண்டாடிக் கற்கின்றீர்!

கொள்கை புதைத்துவிட்டீர்! திண்டாடித் தேய்ந்து

தெருவாடி நிற்கின்றீர்!

கற்பதனால் என்பெருமை?

என்னபயன்? கற்பவற்றில் 佐75

நிற்பதனால் அன்றோ

நிகழ்பயனைக் காண்பீர்கள்!

எல்லா உயிர்க்கும்

பிறப்பொக்கும் என்றுகற்றீர். கல்லாத எங்களுக்குள்

காணாத வேற்றுமைகள் பொல்லாக் குலச்சண்டை

போட்டுடைத்துக் கொள்கின்றீர்! நல்லதெது? தீயதெது? --

நானுரைக்க வேண்டுவதோ? 1280

கல்வியினால் தீமை * * கழன்றொதுங்க வேண்டாவோ?

127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/168&oldid=666381" இலிருந்து மீள்விக்கப்பட்டது