பக்கம்:கழுதை அழுத கதை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂഗു മാ

முக்கால் முகந்திருப்பி

முன்னின்ற காட்சியினைக் 1480 கண்ட கழுதைக்குக்

கண்ணிரண்டும் மங்கியது!

மண்டை கணத்ததுவாய்

மாயமனம் பொங்கியதாய் 'ஓ'வென்ற பேரிரைச்சல்

காதில் ஒலிப்பதுவாய் 'ஆ'வென்று கூச்சலிட்டே,

"அம்மா, மகளே, நீ வந்தாயா? எங்கிருந்தாய்?

வாழாத போக்கிலிநான்! 1485

நொந்தாயா? உன்னை

நொடியில் இழந்தேனே! எங்குநீ போயிருந்தாய்?

என்னஇடர் பட்டாயோ? எங்குத் துயின்றாயோ?

எப்படித்தான் வாழ்ந்தாயோ? ஐயகோ, உன்னை

அணுஅனுவாய்க் கொன்றேனே! உய்யாத முண்டம்நான்!

உன்னைவிட்டுப் போனேனே! 1490

வா, மகளே! வா' - என்றே

வாய்படக்கக் கூறிய, தாய்

'ஒ'வென் றழத்தொடங்கி,

ஒடிவந்து, வெங்களிற்றின்

139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/180&oldid=666393" இலிருந்து மீள்விக்கப்பட்டது