பக்கம்:கழுதை அழுத கதை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഠഭൂു ശ്ലോ

காட்டரசன் வல்லரிமா

கூறும் கருத்துகளைக் கேட்டனவாம்! அக்கால்

அரிமா கிளந்ததிது: 1540

"அன்பு விலங்குகளே!

இன்றோ டனைவரும்நாம் இன்பமுடன் வாழ்வோம்;

எவருக்குந் துன்பிழையோம்; நம்மில் தவறிழைக்கும்

பொல்லாரை நாம் உண்போம்; நம்முடைய காடு

நமக்குப் பொதுவாகும்!

காட்டின் நலன்களெல்லாம்

காப்பதுவே நம்கடமை! 1545 ஈட்டுகின்ற ஈட்டத்துள்

எல்லார்க்கும் பங்குண்டாம்! எல்லாரும் நாமுழைப்போம்!

எல்லாரும் நாம் உண்போம்! பொல்லாப் பசிநோயை

எல்லாரும் போக்கடிப்போம்!

நம்மில்எல் லாருமே

நல்லவராய் வாழ்வமெனில், நம்மில் சிலர்போய்

நகரத்தில் வாழ்கின்ற 1550

145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/186&oldid=666399" இலிருந்து மீள்விக்கப்பட்டது