பக்கம்:கழுதை அழுத கதை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂഗു മഞ്ജു്

தீதாம் உலகைவிட்டுத்

தீமையொன்றும் காணாத

ஏதாமோர் புத்துலகிற்

கின்பமொடு போவதுபோல்,

எண்ணி மகிழ்ந்திருக்கும்

வேளையிலே, இன்கழுதை

வெண்ணிறத்து மூக்கை

விரித்தபடி முன்வந்து,

கீழ்வருமா றாங்குரைக்கும்!

'கீழ்மை உயிர்களெனத் 1575 தாழ்வாக நம்மினத்தை

மக்கள் தரம்பிரிப்பார்!

ஆயினுமே அன்னவரும்

நம்முயிராய் ஆகித்தான்

வாய்விளங்கி, மூளையினுள்

வாய்த்த திறம்விளங்கி,

மாந்த உயிர்களென

வாழுநிலை பெற்றார்கள்! ஏந்துகின்ற நாகரிகம்

எல்லாமும் பின்தானே! 1580

இந்தப் படிபார்த்தால்

எம்குலத்தார் அன்னவர்க்கு முந்தையிலே தோன்றிவிட்ட

முத்தநறுந் தாய்க்குலமே!

149.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/190&oldid=666403" இலிருந்து மீள்விக்கப்பட்டது