பக்கம்:கழுதை அழுத கதை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の列の222タ ダの22ラ のラの22ラ

பெற்றோர்கள் கல்லாத

பெற்றியினால் தாழ்வாரோ?

மற்று).அவர்கள் என்னதாம்

மாந்தநிலை எய்திவிட்டார்?

நம்மைவிடக் கீழான

தீக்குணங்கள் நாட்டுகின்றார்! 1585 மும்மைப் பொழுதுமே

மூள்கின்ற சண்டைகள்தாம்!

புன்மைப் புழுக்கம்,

பொறாமைப் பெரும்புகைச்சல்,

நன்மையொன்றும் நாடாத

தந்நலமே நாடுகின்றார்!

ஆனால்நாம் அன்னவர்போல்

ஆகிவிடக் கூடாது மேன்மேலும் நாமுயர்ந்து,

மேலென்று காட்டுவதே 1590

மாந்தருக்கு நாம்கொளுத்தும்

மானமுள்ள நல்லறிவாம்!

ஏந்துகளும் நாகரிக

எத்துகளும் மேலாமோ?

ஈங்கவர்கள் தம்மைவிட

எல்லா நிலைகளிலும்

ஓங்கி உயர்ந்தவர்நாம்

என்றுணர்த்த வேண்டுகின்றேன்!

150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/191&oldid=666404" இலிருந்து மீள்விக்கப்பட்டது