பக்கம்:கழுதை அழுத கதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഗുണ്ടൂ ിലന്തൂ

(பொதி முட்டையொன்று வீழ்கையில் ஏற்படும் ஒலிக் குறிப்பைப் - "பொத்" எனும் சொல்லிட்டுச் சுட்டுகின்ற அழகும் ஈண்டுத் துய்த்துச் சுவைக்கத் தக்கது) கழக இலக்கியத் தோய்வின் தாக்குரவு!.

நம் ஐயா அவர்கள், - கழக இலக்கியங்களில் தனித்த தோய்வும், துய்த்துத் துய்த்துச் சுவைத்து மகிழத் தக்க வகைமையில் அவற்றைப் பிறரிடம் விளக்குந் திறமும் உடையவரென்பதை - அவரை அணுகி யிருந்தவர் எவரும் அறிவர். அவரின் தோய்வையும் அதன்வழி அவர் பெற்றிருந்த புலவளத்திறனையும் அவரால் யாத்துத் தொகுக்கப் பெற்ற "நூறாசிரியம்" என்னும் நுண்ணிய நூலுள் சிறக்கக் காணலாகும்! அக் கழக இலக்கியத் தோய்வின் தாக்குரவு - இக் கதைப் பாவியத்துள்ளும் சில்லிடங்களில் படிவெய்தியுள்ளன.

தழைத்து வளரும் இளமரங்களடர்ந்த காட்டினைப் பொதும்பர்' என்பது, அக் கால வழக்கு. பொதும்பரின் தோற்றங் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்’ கூறுகையில் - "அப் பொதும்பரில் வெயில் (கதிரவ ஒளி) நுழைந்ததேயில்லை! ஆனால், ஆங்குச் செறிந்தமைந்துள்ள இலை-தழைகளுடே குயில்கள் நுழைந்தியங்கும்" - என்பார்! இக் கருத்தைத் தாங்கிய அவரின் இலக்கிய வரி - "வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண் , 374 என்பதாகும்.

இவ் அழகிய ஆக்கம் பதிவுற்றுள்ள வரிக் கருத்தில் ஐயா.அவர்கள் மனந்தோய்ந்திருந்த உண்மையின் வீச்சு - இப் பாவியத்துள் ஈரிடங்களில் வேற்றுருக்கள்

بينيسستانستاسسسه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/22&oldid=665333" இலிருந்து மீள்விக்கப்பட்டது