பக்கம்:கழுதை அழுத கதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലാദ്രഗ്രഹു ു്

ஓரிடத்தில் மிகக் கவினுறப் பதிவு செய்கின்றார், நம் ஐயா!

காண்க: "தின்னுவதால் மாந்தர்எனும் தீய விலங்குகள்"

(1798)

ஒட்டுமொத்த முடியாக - மாந்தரினமே முட இனம் என்றவாறு முழு வெறுப்புக் குறிப்பைக் காளை வாய் வழியே ஓரிடத்தில் பதிவுசெய்துள்ளமையும் ஈண்டு எண்ணத்தக்கது.

"மொத்தத்தில் மக்களெனும் மூடஇனம்' (482) - என்பது இக் கதைப்பாவியத்துள் காளை வழங்கும் வாய்மொழி!. »

பொருளியல் நிலையில் பெருத்த வேறுபாடுகள் கொண்டு - மாறுபாடான வாழ்க்கை வாழ்வதோடு - அடிப்படை நேயவுணர்வே அற்றவராகவும் இம் மக்கள் வாழ்கின்றனர்! தற்பெருமையும் - பொய்யாகப் புனைந்து புகழ்ச்சிமொழிகளைக் கூறி ஏய்க்கும் தன்மையும் உடையவராக மக்கள் இயங்குகின்றனர்; அவர்களிடையே அன்பில்லை; நேர்மையில்லை; தொண்டுணர்வில்லை; கள்ளாமையில்லை; ஒற்றுமையில்லை; ஒழுங்கில்லை; உண்மை வினையில்லை; அன்னவருள் கற்றோரிடமே மிகுந்த கள்ளம் குடிகொண்டிருக்கின்றது. (201-1205). மேற்குறித்துள்ள. இவ்விழி தகைமைகளைப் பற்றி விலங்குகள் தம் உரையாடலிடையே குறிப்பிட்டு எள்ளும் நிலையிலாக நம் ஐயா அவர்கள் இக் கதைப் பாவியத் தின் பல பகுதிகளை மிக அருமையாக அமைத்துள்ளார்! இழிந்த மனப்பான்மை வாய்ந்துள்ள மாந்தர்கள் வெட்கித் திருந்தும் வகையிலாக இவை பதிவெய்தியுள்ளன!

سیاست- نشسس است.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/30&oldid=665352" இலிருந்து மீள்விக்கப்பட்டது