பக்கம்:கழுதை அழுத கதை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பாவலரேறு ஐயா அவர்கள் இயற்றிய கழுதை அழுத கதை' என்னும் இப் புது வகைப் பாவியம் சிறு வர் மாதிகையான தமிழ்ச்சிட்டு இதழில், தி.பி. 1999 சுறவ இதழான அதன் குரல் : 2; இசை : 6இல் தொடங்கப் பெற்று, இடையறவு பட்டும் தொடர்ந்தும் நாற்பது தொடராக நீண்டு தி.பி. 2017 கடக இதழான அதன் குரல் : 17; இசை 12இல் - பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின் (1968-86) முற்றுப் பெற்றது.

கதையமைப்பைப் பொறுத்து இப் பாவியம், முப்பது

இயல்களாகப் பாகுபடுத்தப் பெற்றிருப்பினும், இஃது ஒராயிரத்து எண்ணுாற்று அறுபத்திரண்டு அடிகளைக் கொண்ட ஒரே இன்னிசைக் கலிவெண்பாவாகும், தமிழிலக்கியப் பரப்பிலேயே இதுகாறும் புனையப் பெற்றுள்ள இவ்வகைப் பாவில் நெடுமையான் மிக்கது. இதுவேயாகும்.

இதழ்கள் - நூல்கள் வெளியீடு, அயல்நாட்டுச் செலவுகள், இயக்கப் பணிகள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள், அரசியற் போராட்டங்கள், சிறைவாழ்க்கை, பொருளியற் சிக்கல்கள் முதலான பல்வேறு இடையீடுகளுக்கும் தடைப்பாடுகளுக்கு மிடையில் அவ்வப்போது சிறிது நேரத்தை ஒதுக்கி ஐயா அவர்கள் இப் பாவியத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். இருப்பினும் இதன் யாப்பமைதியிலும் கதைப்போக்கிலும் எவ்வகைச் சிக்கல்களுமின்றி இது யாற்றொழுக்காக இனி த ைமந்திருப்பது ஆசிரியரின் பாவன் மை யையும் படைப்பாற்றவையும் புலப்படுத்தும்.

போர்க்களத்தே எதிரிகளைக் கண்டு அடலுறத் தாக்கும் ஆற்றல் சான்ற பெருங்களிறு, வேறு பொழுதில் சிறுவர்களை விளையாட்டுக் காட்டி மகிழ்விப்பது போல், நூறாசிரியம் போலும் விழுமிய செய்யுள்களைப் படைத்த பாவலரேறு அவர்கள் இளைஞர்கள் இன்றமிழில் திளைக்குமாறு தாம் எளிவந்து இப்பாவியத்தைப் படைத்திருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/4&oldid=665291" இலிருந்து மீள்விக்கப்பட்டது