பக்கம்:கழுதை அழுத கதை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது, உருவகப் பாட்டு - உருவகக் கதை என்று குறிக்கப் பெற்றிருப்பதால், பொதுவாக விலங்குகளிடம் காணப்படும் சில சிறந்த குணங்கள், மக்கள் சிலரிடம் மிகுந்திருப்பதாகக் கருதப்படுவதால் அத்தகைய மக்களை அவ் விலங்குகளாகவே உருவகஞ் செய்திருப்பதாகவும், ஆசிரியர் தாம் கட்டமைக்கக் கருதும் புதிய குமுகாய அமைப்பை இக் கதையாகப் புனைந்திருப்பதாகவும் கொள்ளப்படும். ஆல்வாறன்றி உருவகம் பற்றி வேறு விளக்கம் ஏதும் புலப்படவில்லை.

இனி, ஐயா அவர்கள், எழிலார்ந்த ஒவியங்களுடனும் பொலிவான தோற்றத்துடனும் நூலாக வெளியிட வேண்டும் என்று கருதியே, இப் பாவியத்தொடர் முற்றுப்பெற்ற பின்னும் அமைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் வாணாளில் இந் நூல் வெளிவரும் வாய்ப்பு இல்லாமற் போனது.

தென்மொழிக்கும் ஐயா அவர்களின் ஐயை உள்ளிட்ட நூல்கள் சிலவற்றுக்கும் ஒவியந் தீட்டியவரும் அவர்களது நல்லன்பைப் பெற்றவருமான ஒவியர் சின்னையன் அவர்களின் ஒவியங்களைத் தாங்கி இப்போது இக் கழுதை அழுத கதை வெளிவருகின்றது.

தமிழ்ப் பல்கலைக் கழகத் தூயதமிழ் அகர முதலிகள் துறைத் தலைவரும் சொல்லாய்வு அறிஞருமான அருளியார் அவர்கள் இந்நூலுக்குக் கதைக்கு முன் கதைப்பு’ எனும் விரிவான அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.

இந்நூலை உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் உவந்து வரவேற்கும் என்று நம்புகின்றோம்.

- தென்மொழி நூல் வெளியிட்டகத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/5&oldid=665293" இலிருந்து மீள்விக்கப்பட்டது