பக்கம்:கழுதை அழுத கதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதுைக்கு - முண் கருைப்பு

ப. அருளி

ஆய்வறிஞர்/தலைவர் தூயதமிழ் - சொல்லாக்க அகரமுதலிகள் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் - 5

தமிழ்க் குமுக இளையோரின் அறிவுத் தெளிவுக் கெனத் "தமிழ்ச்சிட்டு" "தென்மொழி" ஆகிய இதழ்களில் நம் ஐயா அவர்கள் எழுதிவந்த முப்பத்தொன்பது ஆசிரியவுரைகளின் தொகுதியான "இளமை விடியல்" (1995) என்னும் நூலின் படையற்பகுதியில் - தம் தாய்க்கென யாத்துப் படைத்த வாழ்த்துநிலை வெண்பா, இது.

"பெற்றெடுத்து மோந்து பெயரிட்டுப் பேணிநின்று

கற்றறிந்தார் போற்றுமுயர் கல்விதந்து - உற்றதந்தை போனபின்னும் என்னைப் புரந்தஅன்னை குஞ்சம்மாள் வானநினை விற்கு)இதுவோர் வாழ்த்து"

இப் பாவின் முதலடியின் இரண்டாஞ்சீராக வரும் "மோந்து” எனும் எச்சச் சொல்லாட்சியுள் கிடக்கும் தாய்மைவினை தோய்ந்த பாரிய - இனிய - அரிய பாசக் காட்சியுள் - நம் பாவலரேறு ஐயா அவர்களின் துய்ப்புணர்வையும் நுகர்வு விருப்பு உணர்வையும்), குழந்தைகளிடம் இயல்பாக அவர்க்கமைந்திருந்த குளிர்மையார்ந்த நேசவுணர்வு செறிந்த மனக் களனையும், - உணர்வினார் உணரவியலும்!.

g

"குழந்தை!...” எனும் தலைப்பில் 1972-இல், நம்

-ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/6&oldid=665295" இலிருந்து மீள்விக்கப்பட்டது