பக்கம்:கழுதை அழுத கதை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാക്തൃു് -്@ു് ശാ

தீனிக்குக் கேடெனவே

ஆண்டை விரட்டிவிட்டார்!

நொண்டிநொண்டிச் செல்வார்;

நொடிதங்கிப் பின்நடப்பார்- 330 கண்டுகண்டு நொந்தேன்!

கடினமனக் காரிநான்! இல்லையென்றால் என்றோ

இறந்திருக்க மாட்டேனா? புல்லையா தின்றேன்!

புழுதியன்றோ தின்றதுநான்! இப்படியே கண்முன்

இருந்த அவரொருநாள் எப்படியோ எங்கேயோ

என்னைவிட்டுப் போய்விட்டார்! 335 காணாமற் சென்ற

கணவன் தனை நினைந்தே ஊனுண்ண மாட்டேன்;

உறக்கம் கொளமாட்டேன்; நீரருந்த மாட்டேன்;

நிழலில் படுத்திருக்கேன் ஈருயிர்க் காரிநான்

இங்ங்ன் இருந்ததனால், கால்கள் சவசவக்கும்;

கண்கள் மிகவிருளும்! 340 வால்வீசக் கூடவுடல்

தெம்பின்றி வாடிவிட்டேன்!

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/73&oldid=665450" இலிருந்து மீள்விக்கப்பட்டது