பக்கம்:கழுதை அழுத கதை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടൂ ിലന്തൂു് 77°

கந்தை அணிவார்

ஒருவர் பிறிதொருவர்

செந்தாழம் பட்டைச்

சிறப்பில்லை என்றெறிவார் !

நோயால் வருந்தும்

ஒருகூட்டம்; வேறொன்றோ ஒயாமல் உண்டு

செரிக்க மருந்துண்ணும்! 455

கொட்டுமழை வெய்யில்

குளிரில்வாழ் வார்.ஒருவர்;

பட்டுத் தலையணையில்

பாதம்வைப் பார்ஒருவர்!

கோயிலென்றும் தெய்வமென்றும்

கோடிக் கதைபடிப்பார்;

வாயிலொன்றும் நெஞ்சிலொன்றும்

வாழ்க்கை நடத்திடுவார் !

'பார்ப்பார்'என் றோரினத்தைப்

பார்த்திருக்க மாட்டாய்நீ! 470

ஊர்ப்பால் வருந்துயரம் -

எல்லாம் அவரால்தான்!

நெற்றி நிறையவெண்

நீறணிவார்; உச்சியிலே

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/86&oldid=665479" இலிருந்து மீள்விக்கப்பட்டது