பக்கம்:கழுதை அழுத கதை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óg分の2eタ ダ@22 óの22ラ

அன்பர் இரங்கலுரை

ஆற்றி முடிந்தவுடன் இன்பத் தலைவருடல்

எல்லாச் சிறப்புடனும் நல்லடக்கம் செய்யப்

படவும், நடந்தார்கள்! 510

புல்லடர்ந்த மொய்ம்புதர்க்குள்

போயொளிந்த தாய்க்கழுதை

குட்டியொடும் காளையொடும்

வந்து குறுகுறுப்பாய்

எட்டிநடை போட்டே

இடுகாட்டைத் தாண்டியது!

தாண்டியதும் காளை

தனைநோக்கி, "அண்ணாவே மாண்ட தலைவர்தம்

மாண்புகளைக் கேட்டிரோ? 515 மன்னருக்குள் மன்னராம்!

மாண்புயர்ந்த மாந்தராம்! என்னே! வெறும்புகழ்ச்சி!.

எத்தகைய பொய்யுரைகள்!

அன்னவரை நானறிவேன்;

ஆரும் அறிவார்கள். சின்னவருள் சின்னவராம்!

சீர்கெட்ட மாந்தரவர்! நான்வாழும் வீட்டிற்கு

நால்வீடு தள்ளினால் 520

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/91&oldid=665490" இலிருந்து மீள்விக்கப்பட்டது