பக்கம்:கழுதை அழுத கதை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2ó ダの22 ゲの2多

மக்கள் புதைகாட்டில்

மண்ணிட்ட மேடுகளும்

மிக்குயர்ந்து நின்ற

நெடுமரங்க ளும்கடந்தே,

ஆற்றோரம் தாண்டி,

அழகாய்ச் சிலிர்த்தோடும்

ஊற்றோரம் வந்துநின்றே

ஊரை இறுதிமுறை

பின்திரும்பிப் பார்த்துக்

கழுதையம்மை பேசிற்றே!- 590

"என்பிறந்த ஊரிதனை

இன்னும் சிறுபொழுது கண்ணாரப் பார்க்கின்றேன்;

காத்திருங்கள் அண்ணாவே! எண்ணாத எண்ணமெல்லாம்

நெஞ்சில் எழுகுதையே! பாரிலுள்ள மாந்தரிங்குப்

பண்ணும் பிழைகளுக்கே ஊரென்ன செய்யும்?

உலகந்தான் என்செய்யும்?" 595

"இவ்வூரில் தான்பிறந்தேன்!

இவ்வூரில் தான்வளர்ந்தேன்!

இவ்வூரில் தான்என்றன்

இன்கணவர் கைப்பிடித்தேன்!

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/99&oldid=665508" இலிருந்து மீள்விக்கப்பட்டது