பக்கம்:கழுமலப்போர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

சிறப்புற்று விளங்கும் நாடுடையான் ஓர் அரசன், தன் அண்டைநாடும், தன் நாட்டைப் போலவே நிறை பொருளும் பெறுவளமும் பெற்றுளது என்பதற்காகவே, அந்நாட்டின் மீது படை எடுக்க எண்ணான். அண்டை நாட்டைக் காட்டிலும் வளம் குன்றி வறுமையுற்று வாடும் நாடுடையவரே, அவ்வண்டை நாட்டின்மீது படையெடுத்துச் செல்வர். இது உலகோர் அறிந்த உண்மை.

ஆகவே, அவன் இவன் நாட்டின் மீது படையெடுத்து வந்தான் எனவே, அவன் நாடு, இவள் நாட்டைக் காட்டிலும் வளம் குறைந்த நாடு என்பது பெறப்படும். படவே வளம் குறைந்த அந்நாட்டின் மீது, இவனுக்குக் காதல் உண்டாகாது என்பதும் பெறப்படும். காதல் இல்லா நாட்டைக் கைப்பற்றக் கருதார் எவரும்; ஆகவே, இவன் கடமையாகக் கருதப்படுபவை அனைத்தும், இவன் நாட்டு எல்லைக்குள் நிகழும் நிகழ்ச்சிகளே ஆகும். இவன், அவன் நாட்டுள் புகுந்து போரிடுவது இலன். தன் நாட்டின் மீது படையெடுத்து வந்தவனை எதிர்த்துத் துரத்தும் தற்காப்புப் போரே இவன் செய்யும் போர். பகை நாட்டுள் புகுந்து மேற்சென்று தாக்கும் போர் அன்று. வந்த அவன், தன் நாட்டு எல்லையைக் கடந்து அவன் நாட்டுள் ஓடிப் புகுந்து கொண்ட பின்னரும், விடாது துரத்திச்சென்று போரிடுவது கூடாது. இவன் அவ்வாறு போரிடக் கருதுவனாயின், மண்ணாசைக் குற்றம் இவனுக்கும் கற்பிக்கப்படும். ஆகவே, இவன் செயலெல்லாம், இவன் நாட்டு எல்லைக்குள்ளேயே நின்று விடும்; இவன் அவன் மண்ணில் காலடி எடுத்து வைப்பதும் கூடாது.

நாடு இன்று காட்சி அளிப்பது போல் அன்று காட்சி அளிக்கவில்லை. இன்று எங்கு நோக்கினும் நகரங்கள் மலிந்த நாடே. காட்சி அளிக்கிறது; காட்டைக் காண்பதும் அரிதாகி விட்டது. பண்டைய நிலை இதுவன்று. அன்று எங்கு நோக்கினும் மரங்கள் செறிந்த நாடே காட்சி அளித்தது; நகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/17&oldid=1355732" இலிருந்து மீள்விக்கப்பட்டது