பக்கம்:கழுமலப்போர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

விளங்கிய பொய்கையார், பாசறைக்கண் அவன் வேழத்தை வென்று அடக்கியதையும், மூவனை வென்று அடக்கியதையும், மூவனை வென்று அவன் பல்லைக் கோட்டைக் கதவில் அழுத்தியதையும் பாடிப் பாராட்டியுள்ளார். இரும்பொறைபால் பரிசில் பெற வந்தவர்களை வழியிடையில் கண்டு, பெரியோர்களே! நீங்கள் தொண்டி நகர் வாழும் அரசன்பால் செல்கின்றீர்போலும், மதுவளம் மிக்க அத்தொண்டிமா நகரே எம் ஊர்; அந்நகர்வாழ் அரசனே எம் தலைவன். அவனிடம் செல்லும் நீவிர், ‘ஐய! நீ போரில் வெற்றி பெறுந்தோறும், அவ்வெற்றியை வாழ்த்திப் பாராட்டும் பொய்கையாரை வழியிடையே கண்டோம்’ என்று கூறுங்கள். அவனைப் பாடிப் பாராட்டும் நீங்கள், அவன் புகழ் பாடும் என்னையும் மறவாது பாராட்டுங்கள். அப்பாராட்டு, பெரும் பரிசில் பெறத் துணை புரியும்” என்று கூறியதாகப் பாடிய பாட்டில், அவன் ஊரையே தம் ஊராகவும், அவனையே தம் தலைவனாகவும், அவன் புகழ் பாடுவதையே, தம் வாழ்வின் பயனாகவும் கொண்டு உரிமை பாராட்டும் புலவர்தம் பெருமைதான் என்னே![1]

கழுமலப் போரில் வெற்றி கண்ட சோழன் செங்கணான், செங்கண்மால் எனவும், செங்கன் சினமால் எனவும் அழைக்கப்பெறுவான். இவன் கழுமல வெற்றியை அறிவிக்கும் சங்க இலக்கியங்கள், இவன் வரலாறு அறியத் துணை புரிந்தில. இவன் கழுமல வெற்றியைப் பாராட்டும் களவழி நாற்பது என்ற நூல், இவனைப் ‘புனல் நாடன்’, ‘நீர் நாடன்’, ‘காவிரி


  1. “கள் நாறும்மே கானல்அம் தொண்டி;
    அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்;
    அன்னோன் படர்தியாயின், நீயும்
    எம்மும் உள்ளுமோ. முதுவாய் இரவல!
    அமர் மேம் படூஉம் காலை, நின்
    புகழ்மேம் படுகளைக் கண்டனம் எனவே.”

    –புறநானூறு ; 48
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/29&oldid=1359465" இலிருந்து மீள்விக்கப்பட்டது