பக்கம்:கழுமலப்போர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

வந்து சேர்ந்தவுடனே, வெற்றிக்குத் துணை புரிந்த வேல் வீரர்களுக்கு விருந்தளித்துச் சிறப்புச் செய்வன். அவனிடம் இவ்வளவு ஆற்றலும் அறிவும் இருந்தமையால், அவன் வாழ்நாளில் ஒருமுறை கூடப் போரில் தோற்றுப் புறங் காட்டியது இல்லை.[1]

பாணன் பெருமைகளைக் கட்டி அறிந்திருந்தான். அதனால் அவன் துணையை நாடினான். கட்டியின் வேண்டுகோளுக்குப் பாணன் இசைந்தமைக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. பாணன் ஒரு பெரிய மல்வீரன். தன் மல்வீரத்தைத் தமிழகத்தில் விளக்கி வருதல் வேண்டும் என்ற வேட்கையுடையவன் அவன். இப்படையெடுப்பு அதற்கும் துணைபுரியும் என்று நம்பினான். அதற்கு ஏற்ற வாய்ப்பினைத் தேடித் தருவதாகக் கட்டியும் வாக்களித்திருந்தான். ஆக, இருவரும் ஒருவர்க்கொருவர் துணைபுரியவும், அதே நிலையில் தத்தம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் விரும்பித் தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டனர்.

வடவர் படை, வேங்கடமலையைக் கடந்து, பொன்முகரி, பாலாறு முதலாம் ஆறுகள் பாயும் தொண்டை நாட்டையும், பெண்ணையாறு பாயும் மலையமா நாட்டையும் கடந்து சோணாடு புகுந்தது. உறையூர்க் கோட்டையை விரைந்து


  1. “வடாஅது
    நல்வேல் பாணன் நல்நாடு” —அகநானூறு : 325.

    “கல்பொரு மெலியாப் பாடின்நோன் அடியன்,
    அல்கு வன்சுரைப் பெய்த வல்சியன்,
    இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
    ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்
    குவைஇமில் விடைய வேற்றுஆ ஓய்யும்
    கனை இரும் சுரூணைக் கனிகாழ் நெடுவேல்
    விழவு அயர்ந்தன்ன கொழும்பல் திற்றி
    எழாஅப் பாணன் நன்னாடு” — அகநரனூறு : 113.

க. போ .—3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/39&oldid=1359792" இலிருந்து மீள்விக்கப்பட்டது